Выберите трек для воспроизведения

நெஞ்சே நெஞ்சே விட்டு போன சொல்லாம
கண்ணு ரெண்டும் தூங்காம தான் தேடுதே
நிலவே நிலவே இரவுன்ன பாக்காம வெளிச்சம் ஓயாம கண் கூசுதே
எங்கேயும் உன்ன பாக்குறேன்
எப்போதும் உன்ன தேடுறேன்
ஊரோடு ஒத்து போகுறேன்
உள்ளார செத்து போகிறேன்
எனக்கு எனக்கு பொறந்த என் அழகு தேவதையே
ரெக்க வச்சு பறந்துட்டியே உன்ன இப்போ காணலியே
எனக்கு எனக்கு பொறந்த என் அழகு தேவதையே
ரெக்க வச்சு பறந்துட்டியே இந்த வலி தாங்கலையே
அன்பே அன்பே என் உசுரு நீதானே
உனக்குள்ள எந்நாளும் நான் வாழுறேன்
இணையே இணையே என்ன எண்ணி ஏங்காதே
நெனச்சதும் நெஞ்சோரம் நான் பேசுறேன்
உன் மூச்சு காத்த கேளு நீ
நான் தானே உந்தன் கண்மணி
உன் ஜன்னல் எட்டி பாரு நீ
பொன்மின்னல் நானே மின்மினி
எதுவும் கடந்து போகுமே அது போல காதல் இல்ல
ரெக்க கட்டி பறந்திடுமே காலமெல்லாம் உனக்குள்ள
எதுவும் கடந்து போகுமே அது போல காதல் இல்ல
ரெக்க கட்டி பறந்திடுமே காலமெல்லாம் உனக்குள்ள