வெது வெதுப்பா இனிச்சிருக்கும்
வெடல பொண்ணு நானு
விருப்ப பட்டு நெறுங்கி வந்தா
விளக்கு அணைக்கும்னு
வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தேனு
வட்டியோட அசல வாங்கு அதுதானே சீனு
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி
பாத்தா பளபளக்குற
பாலா வழிய வெக்குற
கீத்தா கிழியவெக்குற
கிறுக்கேத்தி
கேட்டா கதையளக்குற
கேப்பா என்ன வெடிக்கிற
தீட்டா ஒதுங்கி நிக்குற
உசுப்பேத்தி
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி
ஏன்டா எலி புடிக்கிற
ஈயா இலை விரிக்கிற
தூண்டி துருவா நிக்குற
சுதி ஏத்தி
வான்டா சுழல வைக்குற
வாகா வழி மறிக்குற
தாண்டி தவறு பன்னுற
அடி யாத்தி
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி(லாலா கட)
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி
ஆச வெறகடுப்புல
வேக விளைஞ்சி நிக்குற
ரோசா உன்ன நினைக்கையில் நெடியேறும்
பாசி பயிறுக் கண்ணுல
பாதாம் பருப்பு செய்யுற
ராசா ஒன்ன நெருங்கையில்
ருசி மாறும்
மத்தாக மனச நீ கடையாம
என்ன மாராப்பில் பதம்பாரு
சத்தாக சகலமும் தரப்போறேன்
மெத்த சாப்பாட்டில் பசி ஆறு
உசுரே கேக்க
உன்ன நான் தூக்க
வாரேன் மாமன் கூத்தடிக்க
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி
பாலும் கொதிச்சிருக்குது
பாயும் விரிச்சிருக்குது
ஆனா அது எதுக்குன்னு தெரியாதா
காயும் கனிஞ்சிருக்குது
வாயும் நனஞ்சிருக்குது
ஆனா அது உனக்குன்னு புரியாதா
உன் கண்ணாடி வளவியும் ஒடையாம
உன்ன கட்டோட மடிப்பேனே
என் கண்டாங்கி புடவையும் கசங்காம
தொட மல்லாந்துக்கிடப்பேனே
உடனே வாடி
ஒழுங்கா தாடி
மூடி போட என்னாதடி
லாலா கட சாந்தி
உன்ன போவேனே நான் ஏந்தி ஆஆ
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி(ஓ ஓ ஓ ஓ ஓ )
லாலா லாலா(ஓ ஓ ஓ ஓ ஓ )