Оберіть трек для відтворення
Сингл / Трек
ஆத்தாடி-ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி-ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல்முதலாய் சிலுசிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா?
என் அடிமனசில் சுகமிருக்கு அடிவயித்தில் பயமிருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா?
ஆத்தாடி
ஆத்தாடி-ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி-ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
நீ மகுடத்தில் வைரக்கல்லு, நானோ மழ பேஞ்ச உப்புக்கல்லு
ஒன்ன தொடவோ, வெரல் படவோ ஒரு பொருத்தம் எனக்கேது?
நான் தரமான தங்கக்கட்டி, நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க, காத்துக்கெடக்க ஒன்ன போல ஆளும் ஏது?
ஆசைக இருந்தாகூட மனம் மசியாது
ஆத்துல விழுந்தாகூட நெழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு ஒன்ன சும்மா விடாது
ஆத்தாடி-ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்காளா
என் ராசாத்தி-ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காளா
கடிகார முள்ளப் போல என்ன கணம்தோறும் சுத்தி வாயா
என்ன தொரத்து, தூள் பரத்து இந்த அல்லிப்பூ கிள்ளி போயா
புளி மூட்ட தூக்கி பார்த்தேன், இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ்சிறுக்கி ஒன்ன முறுக்கி என் அருணாக்கயிறாக்க போறேன்
இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதைய்யா
கழுத்துல கயிறா வந்தா நித்தமும் சொந்தமைய்யா
விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே
ஆத்தாடி-ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒன் ராசாத்தி-ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்கா வா
இது முதல்முதலாய் சிலுசிலுப்பு முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா?
என் அடிமனசில் சுகமிருக்கு அடிவயித்தில் பயமிருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா?