Оберіть трек для відтворення
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்
ஐயன் ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
சுவாமி மலையில் சிவகுருவென்று
சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் ஆ ஆஆ ஆ
தேமதுர மொழியாள்
தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த
அந்த ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்
துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்