Оберіть трек для відтворення
Сингл / Трек
தொறக்காத பொட்டிய தொறந்துதான் விட்டீக
ராசா ஏன் ராசா ஏன் ராசா
முறுக்காத நரம்பத்தான் முறுக்கிதான் புட்டீக
ரோசா ஏன் ரோசா ஏன் ரோசா
ஏ உன்ன பாத்து சொக்கி
ஏன் ரவிக்கயோட கொக்கி
அது விட்டுப்போச்சு மக்கி
நீ தைக்க வேணும் எக்கி
உன் பாவாட சுத்துறப்போ
பார்த்தவன் லக்கி
தொறக்காத பொட்டிய தொறந்துதான் விட்டீக
ராசா ஏன் ராசா ஏன் ராசா
மரவள்ளிக் கெழங்கும் கன்னிப்பொண்ணு வயசுக்கும்
ஒத்துமையும் இருக்குதையா சொல்வாயா?
இரண்டுமே இனிக்குது
பொதஞ்சுதான் கெடக்குது
தோண்டித் தோண்டி எடுக்குறப்போ பொறுப்பாயா?
ஏ நாட்டுக்கோழி ஜாதிக்கும்
வயசுப் பொண்ணுக்கும்
ஒத்துமையும் இருக்குது
என்ன சொல்லுயா?
ரெண்டுக்கும் கொழுப்பு துடிக்குது
ஆ கொழுப்புதான் சேவல் அடக்குது
சீப்போயா எல்லாமே பேச்சில் நிக்குது
முறுக்காத நரம்பத்தான் முறுக்கிதான் புட்டீக
ரோசா ஏன் ரோசா ஏன் ரோசா
தொறக்காத பொட்டிய தொறந்துதான் விட்டீக
ராசா ஏன் ராசா ஏன் ராசா
பொம்பள ஆசதான் கொசுவத்தி மாதிரி
விடியிற நேரமட்டும் தீராது
ஆம்பள ஆசதான் ஊதுபத்தி மாதிரி
கொஞ்சநேரம் ஆனதுதான் இருக்காது
எட்டு இன்ச் இடுப்புல ஆறு மடிப்புதான்
அதில ஒன்னே ஒன்னு கேக்குறேன்
நீயும் குடுப்பயா?
ஒன்னுதான் குடுக்க மாட்டேனே
ஆறயும் கேட்டா குடுப்பனே
நான் கேட்டதெல்லாம் கெடச்சுப்புட்டா
எனக்கும் மோட்சம் தான்
தொறக்காத பொட்டிய தொறந்துதான் விட்டீக
ராசா ஏன் ராசா ஏன் ராசா
முறுக்காத நரம்பத்தான் முறுக்கிதான் புட்டீக
ரோசா ஏன் ரோசா ஏன் ரோசா
ஏ உன்ன பாத்து சொக்கி
ஏன் ரவிக்கயோட கொக்கி
அது விட்டுப்போச்சு மக்கி
நீ தைக்க வேணும் எக்கி
உன் பாவாட சுத்துறப்போ
பார்த்தவன் லக்கி
ஹ்ம்ம் ரரனானனனே
நனனே நானானே ராசா ராசா
தானானே தந்தானே
தன நான தந்னானே
ரோசா ஏன் ரோசா ஏன் ரோசா