Оберіть трек для відтворення
நீ தரா மழை வானம் தேடுதே!
நா வரா கதை கானல் சூடுதே!
முகை முகிழ் மலர் நிலை
எனை எனுள் நிறை மழை
போலே வாழா ஆழம் தேடுதே!
முதல் வெயில் முகம் வரை
கணம் மனம் கடல் நிலை
ஏனோ ஏதோ ஏக்கம் கூடுதே!
மனமென வான் நிலை இடம்மாற
புது இசையாய் இதழ் அசையாட
முதலுயிராய் தடம் திசைதேட
மறுமுறையாய் வாழ!
காலமே வலிகள்தீராதோ, நாளையே
விடியல் காணாதோ சாலையே
தேடலே திசை இங்கே!
மேகமே மொழிகள் சூடாயோ தாகமே
துளிகள் பேசாயோ ஈரமே
தூறலே இசை இங்கே!
மொழிகள் பேசா வார்த்தை எங்கும் கேட்குதே!
இதழ்கள் சேரா காட்சி எங்கும் பார்க்குதே!
வினா தரும் கனாக்களாய் வாராயோ வாழவே!
தினம் விழும் எழும் அலை
கரை தொடும் முதல் நுரை
தானே நானே கானல் ஆகிறேன்
இழை இடை இசை என
இலை இடை மழை என
நானே யாதோ? யாவும் வாழ்கிறேன்
மனமென வான் நிலை இடம்மாற
புது இசையாய் இதழ் அசையாட
முதலுயிராய் தடம் திசைதேட
மறுமுறையாய் வாழ!