Оберіть трек для відтворення

சொல்லித்தரவா? சொல்லித்தரவா? சொல்லித்தரவா?
ஒண்ணு ஒண்ணா, ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரவா?
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்
ஒண்ணுத் தெரியாத கெட்டபையன் நீதான்
ஏய் எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணும் நான்தான்
ஏ செல-செல-செல-செல, நீதானே செப்பு செல
மல-மல-மல-மல, கூத்தாடும் கொல்லி மல
அல-அல-அல-அல, ஓயாது உந்தன் அல
தல-தல-தல-தல தாழாத உந்தன் தல
சொல்லித்தரவா? சொல்லித்தரவா? சொல்லித்தரவா?
ஒண்ணு ஒண்ணா, ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரவா?
நான் தொட்டதும் பட்டதும் சொட்டிடும் கொட்டிடும் சக்கரப் பந்தலில் தேன் மாறி
நான் நச்சுன்னு பச்சுன்னு இச்சொன்னு வெச்சதும் பிச்சுக்கும் பாரு நம் கச்சேரி
ஏய் என்கிட்ட உள்ளதெல்லாம் உன்கிட்ட நான் தந்து விட்டேன்
தந்ததே கொஞ்சமின்னு சுந்தரி நான் கண்டுக்கிட்டேன்
பொத்தியே வெச்சாக்கூட பொத்துக்கும் வேளையிது
கொடி-கொடி-கொடி-கொடி, நீ காட்டு பச்சக்கொடி
வெடி-வெடி-வெடி-வெடி, நான் வெப்பேன் ஒத்த வெடி
படி-படி-படி-படி எல்லாம்தான் அத்துபடி
பிடி-பிடி-பிடி-பிடி என்னத்தான் விட்டுபிடி
சொல்லித்தரவா? சொல்லித்தரவா? சொல்லித்தரவா?
ஒண்ணு ஒண்ணா, ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரவா-வா?
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்
ஏய் அப்பவும் இப்பவும் எப்பவும் இப்படி என்னையே சுத்துற பின்னாலே
அட நித்தமும் பூத்திரி ஏத்துற ராத்திரி நித்திரை கெட்டது உன்னாலே
நீ எப்பவும் ஒத்துழைச்சா எங்கையோ நான் கொண்டு போவான்
மெத்தையில் முன்னும்-பின்னும்
குத்துகிற முள்ள எடு
குத்தினா குத்தட்டுமே காதல் வலி முத்தட்டுமே
எட-எட-எட-எட, என்னாகும் சின்ன எட
தொட-தொட-தொட-தொட, கண்ணீர கொஞ்சம் தொட
நட-நட-நட-நட, தள்ளாடும் வஞ்சி நட
தட-தட-தட-தட, நான் தாங்க என்ன தட
சொல்லித்தரவா? சொல்லித்தரவா? சொல்லித்தரவா?
ஒண்ணு ஒண்ணா, ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரவா?
ஏய் சொல்லிக் கொடுத்தா கத்துக் கொள்ளுற கத்துக்குட்டி நான்
தங்க மீனுக்கே தேவப்படுதே தண்ணித் தொட்டிதான்
ஒண்ணுத் தெரியாத கெட்டபையன் நீதான்
எல்லாம் தெரிஞ்ச நல்ல பொண்ணும் நான்தான்
ஏ செல-செல-செல-செல, நீதானே செப்பு செல
மல-மல-மல-மல, கூத்தாடும் கொல்லி மல
அல-அல-அல-அல, ஓயாது உந்தன் அல
தல-தல-தல-தல தாழாத உந்தன் தல