Оберіть трек для відтворення
Сингл / Трек
முதல் மழையே முதல் மழையே
முதன் முதலாய் என்னை நனைக்கிறியே
முதல் விதையே முதல் விதையே
முதன் முதலாய் நெஞ்சில் முளைக்கிறியே
என்னை மறந்தேனே நானே
உந்தன் வசமாகி போனேன்
உன்னை நினைத்தேனே நானே
என்னை மறந்தே தான் போனேன்
என் பாதி நீ உன் பாதி நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
முதல் மழையே முதல் மழையே
முதன் முதலாய் என்னை நனைக்கிறியே
இருவரின் பார்வைகள் உரசிடும் நேரம்
இதயத்தில் மழையுடன் மின்னல்கள் தோன்றும்
இடைவெளி கொஞ்சமாய் குறைந்திடும் நேரம்
சுவாசத்தில் செல்லமாய் வெப்பங்கள் கூடும்
யாரோடும் பேசவில்லையே
எங்கேயும் போகவில்லையே
என்னாச்சு பெண்ணே எனக்கு
பசி தாகம் தோன்ற வில்லையே
படித்தாலும் நினைவில் இல்லையே
புடிச்சாச்சு காதல் கிறுக்கு
உன் காதோரம் கம்மலா நான் பிறந்திடவா
உன் கன்னத்த உரசித்தான் கிடந்திடவா
முதல் விதையே முதல் விதையே
முதன் முதலாய் நெஞ்சில் முளைக்கிறியே
இருவரின் வேர்வைகள் இணைத்திடும் நேரம்
இதுவரை வாழ்ந்ததே இதற்கென தோன்றும்
இருவரின் வாசங்கள் கலந்திடும் நேரம்
உயிரிலே புது புது கலவரம் தோன்றும்
சில்லென்று தென்றல் வீசுதே
சட்டென்று தீயும் வீசுதே
இது தானா காதல் மயக்கம்
சொல்லாமல் உதடு பேசுதே
நில்லாமல் கண்கள் தேடுதே
வந்தாச்சு காதல் எனக்கும்
அட இது என்ன இது என்ன புது சுகமோ
உன் சொந்தம் போல் வேறேதும் உடன் வருமோ
முதல் மழையே முதல் மழையே
முதன் முதலாய் என்னை நனைக்கிறியே
என்னை மறந்தேனே நானே
உந்தன் வசமாகி போனேன்
உன்னை நினைத்தேனே நானே
என்னை மறந்தே தான் போனேன்
என் பாதி நீ உன் பாதி நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் பாதை நீ உன் பாதம் நான்