Оберіть трек для відтворення
கண்ணுமுழி காக்கா முள்ளா?
புருவம் ரெண்டும் குருவ நெல்லா?
நீ ராந்த போல தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார வந்து வெளிச்சம் தார
தல, காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்க மொளச்சு பறக்குது யாத்தே
கண்ணுமுழி காக்கா முள்ளா?
உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா?
நேசத்துக்கும் பாசத்துக்கும் தேசம் ஒன்னும் தேவையில்ல
பாஷையத்தான் பாத்து வர காதல் வெறும் வார்த்தையில்ல
கண்ணு-கண்ணு மோதுன வேளையில
மண்ணவிட்டு வந்தவ என்னோட
நெஞ்சுல நெறஞ்சுட்ட, உசுரில் கறஞ்சுட்ட
உள்ளுக்குள் புகுந்துட்ட, மூச்சுல கலந்துட்ட
மனசு ரெக்க மொளச்சு பறக்குது யாத்தே
புருவம் ரெண்டும் குருவ நெல்லா?
நீ ராந்த போல தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார வந்து வெளிச்சம் தார
தல, காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்க மொளச்சு பறக்குது யாத்தே
பக்கத்துல நீ நடந்தா கல்லும்-முள்ளும் புல்லாகும்
காட்டுவழி பாதையெல்லாம் கம்பளத்த போலாகும்
கைபுடிச்சு கூடவே நீயும் வந்தா
கண்டம்விட்டு கண்டமும் கடந்து
வானத்தில் எட்டுவெப்பேன் அந்த நிலவ கிள்ளி
ஒன் நெத்திக்கு போட்டு வெப்பேன் பக்க தொண இருப்பேன்
மனசு ரெக்க மொளச்சு பறக்குது யாத்தே
கண்ணுமுழி காக்கா முள்ளா?
உன் புருவம் ரெண்டும் குருவ நெல்லா?
நீ ராந்த போல தெனம் ராத்திரி வேள
என் சொப்பனம் வார வந்து வெளிச்சம் தார
தல, காலு புரியலையே
உன் பாஷ தெரியலையே
மனசு ரெக்க மொளச்சு பறக்குது யாத்தே