Оберіть трек для відтворення
Сингл / Трек
ஒருநொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடி
அழகான ஓவியத்தை கிழித்தாயடி
சிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடி
விதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி
சேர்ந்து கண்ட கனவுகள் பிழையா? சொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யா?
கண்ணீர் இங்கு சிந்திகொண்டு கேள்வி கேட்க்கிறேன்
"சாகும்வரையில் கூடவே இருப்பேன்" என்று செய்த சத்தியமெல்லாம்
வெறும் வார்த்தையா? நீ போட்டது பகல்வேஷமா?
ஏன்டி விட்டு போன? உன் இதயம் கல்லா என்ன?
ஏன்டி விட்டு போன? நிஜமா புரியலடி
ஏன்டி விட்டு போன? நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டு போன? அய்யோ வலிக்குதடி
உன்ன ரசிச்ச எனக்கிது வேணும், உன்ன நேசிச்ச எனக்கிது வேணும்
உன்ன நம்பி நான் கிடந்தேனே எனக்கு இன்னும் வேணும்டி
தீயில் விழும் ஈசலை போல உன் விழியில் விழுந்தவன் நானோ
உயிர் மொத்தமும் வெந்துத் தணிந்து காந்தலாச்சுடி
உன்னை பிரிந்தால் அன்பே உலகம் சுழலாதடி
தன்னந்தனியாய் இனிமே நானும் உலகினில் வாழ்ந்து என்னடி?
எந்தன் ஆகாயத்தின் நிலவே நீதானடி
உன்னை நான் தேடி, நான் தேடி என் ஆயுள் தீரட்டும்டி
ஏன்டி விட்டு போன? உன் இதயம் கல்லா என்ன?
ஏன்டி விட்டு போன? நிஜமா புரியலடி
ஏன்டி விட்டு போன? நான் தனியா இங்க சாக
ஏன்டி விட்டு போன? அய்யோ வலிக்குதடி
ஏன்டி... ஏன்டி... ஏன்டி விட்டு போன நீ?
என் நெஞ்ச மண்ணுல நீயும் குழித்தோண்டி பொதச்சுட்டடி
ஏன்டி... ஏன்டி... ஏன்டி விட்டு போன நீ?
உயிர் இருந்தும் பிணத்த போல உன்னால மாறிட்டேன்டி