Оберіть трек для відтворення
ஹம்ஹம்
நனரினா
நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை
ஓஓஓஓ
ஆஹஅஹான் ஆஹஅஹான்
ஜில்...ஜில்...ஜில்
ஏதோ ஒன்று என்னை ஈா்க்க
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா
நீ நின்ற இடமென்றால்
விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பாா் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ
மெய்யோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே போகாதே
நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே
உன் மேல் பிழை ஹோ
நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை
ஹூஹூம்ம் ஹூஹூம்ம் ஹூஹூம்ம் ஹூஹூம்ம்
தூக்கங்களை
தூக்கிச் சென்றாய்
தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச்
சென்றாய் உன்னை தாண்டி
போகும் போது
போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை (ஹம்ம்ம்)
கேட்காதது காதல் இல்லை (ஹம்ம்ம்)
என் ஜீவன் ஜீவன்
நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை
இல்லை என்றாலே என்
நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி (ஹம்ம்ம்)