Оберіть трек для відтворення
ஜோதி நிரஞ்சவ, சொன்னவுடன் சமஞ்சவ
போடப்போறா, மால போடப்போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலில
போடப்போறா, தாலி போடப்போறா
அட உங்க மணவிழா, இது எங்க திருவிழா
அட பச்சப்பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா, இது எங்க திருவிழா
அட பச்சப்பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
ஜோதி நிரஞ்சவ, சொன்னவுடன் சமஞ்சவ
போடப்போறா, மால போடப்போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலில
போடப்போறா, தாலி போடப்போறா
பட்டுச்சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன், ஓஹோ-ஓ
பட்டுச்சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
தங்கத்துக்கே சங்கிலியா? செங்கமலத்துக்கே மல்லிகையா?
தங்கத்துக்கே சங்கிலியா? செங்கமலத்துக்கே மல்லிகையா?
தேனுண்ணும் திருவாயை நான் உண்ணும் நாள் வந்ததோ? ஹோ-ஹோ-ஓ
ஜோதி நிரஞ்சவ, சொன்னவுடன் சமஞ்சவ
போடப்போறா, மால போடப்போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலில
போடப்போறா, தாலி போடப்போறா
கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ?
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ?
கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ?
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ?
இதயக்கூட்டில் வளர்த்தாளே தாய் இவளை எங்ஙனம் பிரிவாளோ?
இதயக்கூட்டில் வளர்த்தாளே தாய் இவளை எங்ஙனம் பிரிவாளோ?
ஆனந்தம் ஒரு கண்ணில், துயரங்கள் மறு கண்ணிலே
ஜோதி நிரஞ்சவ, சொன்னவுடன் சமஞ்சவ
போடப்போறா, மால போடப்போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலில
போடப்போறா, தாலி போடப்போறா
அட உங்க மணவிழா, இது எங்க திருவிழா
அட பச்சப்பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மணவிழா, இது எங்க திருவிழா
அட பச்சப்பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
லட்சம் வெண்ணிலா