Оберіть трек для відтворення
வெற்றி கழக கொடி ஏறுது, நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றி கழக கொடி ஏறுது, மக்கள் ஆச நெஜமாகுது
வெற்றி கழக கொடி ஏறுது, நம்ம சனத்தின் விதி மாறுது
வெற்றி கழக கொடி ஏறுது, மக்கள் ஆச நெஜமாகுது
தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒளிக்குது
தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒளிக்குது
சிறுசும் பெருசும் ராசிக்குது, சிங்க பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள்கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது
மனசில் மக்கள வைக்கும் தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு ஆடி பாடி கூப்பிடுது
சிகரம் கெடச்ச பின்பு எறங்கி வந்து சேவ செஞ்சு
நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது
தமிழா-தமிழா நம்ம வாழ போறோமே
ஒரு கரையில்லாத கைய புடிச்சு போகபோறோமே
தமிழா-தமிழா நம்ம வாழ போறோமே
ஒரு கரையில்லாத கைய புடிச்சு போகபோறோமே
தமிழன் கொடி, தலைவன் கொடி, தர்ம கொடி, தரையின் கொடி
வீர கொடி, விஜய கொடி, ஆதிகுடிய காக்கும் கொடி
ஹே தமிழன் கொடி, தலைவன் கொடி, தர்ம கொடி, தரையின் கொடி
வீர கொடி, விஜய கொடி, ஆதிகுடிய காக்கும் கொடி
ஹே இரத்த சிவப்பில் நிறம் எடுத்தோம், ரெட்ட யான பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி கொடியின் உரு கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம், பச்ச நீல திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வரத பறையடிச்சோம்
தூர நின்னு பாக்கும் தலைவன் காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கைய போடும் தலைவன் கொடி ஏறுது
அரசர கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி
ஹே தமிழன் கொடி, தலைவன் கொடி, தர்ம கொடி, தரையின் கொடி
வீர கொடி, விஜய கொடி, ஆதிகுடிய காக்கும் கொடி
தலைவன் கொடி, தர்ம கொடி, தரையின் கொடி, வீர கொடி
வெற்றி வாகை சூடப்போற விஜய கொடி, மக்கள் கொடி
தமிழன் கொடி பறக்குது