Оберіть трек для відтворення
Сингл / Трек
கடவுளோ தூங்கவில்லை
கல்லாகி போகவில்லை
பாவத்தை யார் செய்தாலும்
தப்பிக்க பாதையில்லை
ஆறடி குச்சி வீட்டுக்குள்ளே
ஆயிரம் பாவத்தை சேர்த்தாயே
ஆடி அடங்குற காலத்தில
ஆண்டவன் முகத்தை பார்த்தாயே
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
ஒன்பது வாசல் பட்டணமாம்
ஒடம்பு வாங்கி வந்தாயே
பட்டணம் தாண்டி போகும்வரை
பாவம் செய்தே வாழ்ந்தாயே
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
அழுதுகொண்டே பிறந்தாய் நீ
அடுத்தவர் அழுகை ரசித்தாய் நீ
முகத்திரை அணிந்து வாழ்ந்தவனே
முகத்தை எங்கோ தொலைத்தாய் நீ
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
உன்னை நீயே விற்றுவிட்டாய்
உலகத்தை வாங்கி லாபம் இல்லை
கருவுக்குள் மூடிய கண்ணிரண்டை
கடைசிவரை நீ திறக்கவில்லை
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
கூடிய உறவை பகைத்தாய் நீ
கூலிக்கு உனையே கொன்றாய் நீ
இதய குகையில் வெளிச்சம் வர
எத்தனை பாம்புகள் கண்டாய் நீ
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தெய்வம் உன்னை சோதித்ததா?
தெய்வத்தை நீதான் சோதித்தாய்
கொள்ளி வைக்கிற நாள் வரும் முன்
நீயே உனக்கு தீ வைத்தாய்
தயா தயா நீ அழுதாயா?
புதிதாய் இன்று பிறந்தாயா?
தயா தயா நீ அழுதாயா?