Оберіть трек для відтворення
மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே
மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே
மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ
மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே
ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ
ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே
அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே
ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ
ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே
பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே
பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ
பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே
தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே
தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ
தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே
சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே
சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ
சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு
ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு
ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா
ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ