Оберіть трек для відтворення
விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே
பழகாமல் என் கிளியே
பறக்காதே நீ வெளியே
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே
அன்பே அன்பே
என் காதல் பொய்யில்லையே
அன்பே அன்பே
அதை சொல்ல வழியில்லையே
அன்பே அன்பே
நீ இன்றி நானில்லையே
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன்
பிரிந்து போகின்றதே
விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே
ஓ பழகாமல் என் கிளியே
பறக்காதே நீ வெளியே
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே
மானே ஏனோ உந்தன்
மௌனம் புரியவில்லை
உன்னை தேற்ற ஒரு
மொழியும் கையிலில்லை
ஆனால் உன் மேல் உள்ள
காதலும் குறையவில்லை
வழி தெரியாத ஒளி தெரியாத
ஒருவித காட்டில் மாட்டிக்கொண்டேன்
எனை அறியாமல் நீ செல்லும்
போது காயம் கொண்டேனே
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே
அன்பே அன்பே
என் காதல் பொய்யில்லையே
அன்பே அன்பே
அதை சொல்ல வழியில்லையே
அன்பே அன்பே
நீ இன்றி நானில்லையே
அட கடவுள் தந்த வரம்
கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே
தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி
பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி
ஒரு நாள் வருவாய் என்று உள்ளம் ஏங்குதடி
சிறு பிள்ளை தவறை தாயறிவாழே
அது போல் என்னை மன்னிப்பாயா
இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ சொல்
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே
விலகாதே எனதுயிரே
விலகாதே எனதுயிரே (எனதுயிரே)
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே (எனதுயிரே)
பழகாமல் என் கிளியே
பறக்காதே நீ வெளியே
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே... ஏ... ஏ... ஹோ...
எனதுயிரே... ஏ...