
Сингл / Трек
வானிலை சுகம் சுகம்
வாட்டுதோர் முகம் முகம்
நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்
உன் மடியில் சாய்ந்திட
மலெரன வீழந்திட
நாளும் அரும்புகிறேன்
நான் என்னையும் மீறி
வெண்நிலவாகித் ததும்புகிறேன்
வானிலை சுகம் சுகம்
வாட்டுதோர் முகம் முகம்
பார்த்த முதல் நாளே
பேசும் கலையாலே
ஈர்த்து செல்வான்
என் கதாநாயகன்
கைகள் ஆடாமல் பேசத் தெரியாதே
காற்றுக்கும் ஏதோ கதை சொல்பவன்
பாடல்களை நான் ரசித்தேன்
நீ ரசித்தாய் சேர்ந்தினி
ஒன்றாக நாம் ரசிப்போம்
இரவுகளை கார்த்திகை மாா்கழி மாதத்து
முன்பனி நிலாவில் நாம் களிப்போம்
ஒரு கற்பனை மீறும்
உன்னத வாழ்வை வாழ்ந்திருப்போம்
வானிலை சுகம் சுகம்
வாட்டுதோர் முகம் முகம்
ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது
ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது
தூவானம் பிடிக்குமே உனக்கும்
கை கோர்த்து நனையவே அழைக்கும்
ஆஹா ஹா நினைக்கவே சிலிர்க்கும்
நெஞ்சோரம் நினைவுகள்
நதிக்கரை நானல்கள் ஆகும்
தான் வளைவதை யாரிடம் கூறும்
குளிர்வதை யாரிடம் கூறும்
என் விடுகதை உன்னால் தான் தீரும்
வானிலை சுகம் சுகம்
வாட்டுதோர் முகம் முகம்
நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்
உன் மடியில் சாய்ந்திட
மலெரன வீழந்திட
நாளும் அரும்புகிறேன்
நான் என்னையும் மீறி
வெண்நிலவாகித் ததும்புகிறேன்
வான் வானெங்கும்
வானெங்கும் வானெங்கும்
ஆஹா ஆஹா ஆஹா வானெங்கும்
வானெங்கும் வானெங்கும்
ஆஹா வானெங்கும்
வான் வானெங்கும்
வானெங்கும் வானெங்கும்