Оберіть трек для відтворення
ரிச ரம ரிச ரிம சயிரேமயிமோ சயிரேமயிமோ
அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா
அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா
கனவிலே கடவுளைக் கண்டால்
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னைக் கண்டால்
என் மனம் துள்ளிக் குதிக்கும்
நிலா நிலா நீ வா வா வா
நில்லாமல் நீயும் ஓடி வா
அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா
நன நன நனா நன நன நனா
செல்லமாய் சண்டை போட்டு
கோபமாய் முறைத்து பார்த்து
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா ஆ
மென்மையாய் என்னை அணைத்து
பெண்மையின் ஆசை புழிந்து
என்னையே சீண்டிப் பார்க்க வா வா வா
தூங்குகின்ற உன் அழகை
கண்டால் கண்டால் எந்தன் உள்ளம் பூத்திடுவேன்
தூக்கத்திலே தூக்கத்திலே
உன்னையெண்ணி உன்னையெண்ணிப் புன்னகைப்பேன்
வெய்யிலிலே இருக்கின்ற
உன் இதழைப் பார்த்தாலே
வேர்வை அதை துடைக்கும்
கைக்குட்டை என இதயம் மாறிடுமே
நிலா நிலா நீ வா வா வா
நில்லாமல் நீயும் ஓடி வா
அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா
நனன்நனனா நனன்நனனா நனன்நனனா
விழிகளே காணா தூரம்
தொலைவில் நீ இருக்கும்போதும்
அருகிலே உன்னைப் பார்ப்பேன்
ஹேஹே ஹேஹே
இருவரின் இமைகள் சேரும்
அருகில் நீ இருக்கும்போதும்
தெரிந்துதான் என்னைத் தொலைப்பேன்
ஹேஹே எஹி எஹியே
ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்
என்னில் இன்று நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்
ஒற்றிக்கொண்டேன் ஒற்றிக்கொண்டேன்
உந்தன் உள்ளம் அள்ளி அள்ளி ஒற்றிக்கொண்டேன்
நிஜங்கள் அது பொய்யாக
பொய்கள் அது நிஜமாக
காதல் அதில் உண்டு பல குழப்பம்
அதை நானும் அறிந்தேனே
அர்ஜுனா அர்ஜுனா
அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால்
உள்ளம் தைத்த அர்ஜுனா
கனவிலே கடவுளைக் கண்டால்
தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னைக் கண்டால்
என் மனம் துள்ளிக் குதிக்கும்
நிலா நிலா நீ வா வா வா
நில்லாமல் நீயும் ஓடி வா(ஓடி வா)