Оберіть трек для відтворення
Сингл / Трек
பொன்வண்டு மொய்ப்பதனால்
பூ மொட்டு மலர்வது போல்
கண் வண்டு மேல் விழவே
கண்ணன் சிலிர்க்கின்றான்
அன்னை உன் கடைக்கண்ணின்
அற்புதம் என்ன சொல்வேன்
பொன்மகளே வருக
பொன்மழையே பொழிக
குவளை மலர் தேனில்
குளித்திட வண்டினங்கள்
வருவதும் போவதும் போல்
படர்ந்திடும் காதலினால்
குவளை மலர் தேனில்
குளித்திட வண்டினங்கள்
வருவதும் போவதும் போல்
படர்ந்திடும் காதலினால்
இருவிழி அலைந்திடுமே
எழில் முகம் நாணிடுமே
இருவிழி அலைந்திடுமே
எழில் முகம் நாணிடுமே
திருமால் இணை பார்ப்பாய்
சிறிதே எனை பாராய்
இருவிழி திறந்து வைத்தேன்
இதயத்தையும் விடுத்தேன்
மயங்கிடும் மாயனிடம்
மன்மதனை ஏவி
இருவிழி திறந்து வைத்தேன்
இதயத்தையும் விடுத்தேன்
மயங்கிடும் மாயனிடம்
மன்மதனை ஏவி
கருவிழி அரைவிழியாய்
கண்களில் இன்ப வெள்ளம்
கருவிழி அரைவிழியாய்
கண்களில் இன்ப வெள்ளம்
பெருகிடும் திருமகளே
பேதையையும் பாராய்
திருமால் எழில் மார்பில்
திகழ்ந்திடும் செம்மணியை
மறுவிடும் கருநீல
மணிவளம் போல் உந்தன்
திருமால் எழில் மார்பில்
திகழ்ந்திடும் செம்மணியை
மறுவிடும் கருநீல
மணிவளம் போல் உந்தன்
கருவிழி பட்டமிடும்
காட்சியை என்னென்பேன்
ஆ
கருவிழி பட்டமிடும்
காட்சியை என்னென்பேன்
ஒரு முறைக்கும்
கடைக்கண் ஒளியால்
எனை பாராய்
நீர்மிகும் கார்முகிலில்
நிலவிடும் மின்னலைப்போல்
தேவனின் திருமார்பில்
திகழும் உன் பொன் அடிகள்
நீர்மிகும் கார்முகிலில்
நிலவிடும் மின்னலைப்போல்
தேவனின் திருமார்பில்
திகழும் உன் பொன் அடிகள்
வாழ்த்துவர் வாழ்ந்திடுவார்
வணங்கினேன் என் தாயே
ஏ
வாழ்த்துவர் வாழ்ந்திடுவார்
வணங்கினேன் என் தாயே
சேர்த்திடு உன் கடைக்கண்
திருவே எனக்கருளே
சேர்த்திடு உன் கடைக்கண்
திருவே எனக்கருளே
கடைக்கண்ணால் நோக்கி நோக்கி
கண்ணனை தாக்கி
காமன் படைக்கலம் கோர்க்கும்
அன்பு பாவையே சரணடைந்தேன்
கடைக்கண்ணால் நோக்கி நோக்கி
கண்ணனை தாக்கி
காமன் படைக்கலம் கோர்க்கும்
அன்பு பாவையே சரணடைந்தேன்
அரைக்கண்ணால் எனையும் நோக்கி
ஆறுதல் சொல்வாய் தாயே
அரைக்கண்ணால் எனையும் நோக்கி
ஆறுதல் சொல்வாய் தாயே
இசக்கினில் யாவும் நல்கி
என்னையும் காப்பாய் அம்மா
இசக்கினில் யாவும் நல்கி
என்னையும் காப்பாய் அம்மா
இந்திர பதங்கள் யாவும்
இங்கேயே காண செய்யும்
இந்திர பதங்கள் யாவும்
இங்கேயே காண செய்யும்
தந்திரம் வல்லதுந்தன்
தனி நீல விழியின் மையம்
தந்திரம் வல்லதுந்தன்
தனி நீல விழியின் மையம்
மந்திரம் போட்டே அந்த
மாலையும் மயக்குவாயோ
மந்திரம் போட்டே அந்த
மாலையும் மயக்குவாயோ
ஓய்ந்திட ஏழை
ஒரு கணம் கண் திறம்மா
ஒரு கணம் கண் திறம்மா
தலைவிதி தடுத்த போதும்
தரமிலை என்றாலும்
உன் கருவிழி கடைக்கண் பார்வை
கதியினில் உயர்த்தும் அம்மா
தலைவிதி தடுத்த போதும்
தரமிலை என்றாலும்
உன் கருவிழி கடைக்கண் பார்வை
கதியினில் உயர்த்தும் அம்மா
அளவிலா மகிழ்ச்சி பொங்க
ஆயனை அழைக்கும் கண்கள்
எளியனை பார்க்க நேர்ந்தால்
ஒரு குறை இல்லை அம்மா
மழையை வேண்டி தளரும் அருகும்
வளரும் சாதக பறவை ஒருகும்
எளியேன் நிலையின் அதுவே எனினும்
திரு உன் அருளால் துயர்கள் விலகும்
கருமை விழியா மேகம் கலையும்
கருணை காற்றோ கலந்து பொழியும்
வறுமை கொடுமை எங்கோ தொலையும்
வளமை இனிமை வாழ்வு மலரும்
உலகை படைக்கும் கலைமகள் நீயே
ஊட்டி வளர்க்கும் திருமகள் நீயே
நிலையாமை சொலும் துர்கா தேவி
நீயே என் தாய் பார்வதி சூலி
நிலவை தலைமேல் உலவிட வைத்தா
நெஞ்சில் உலாவும் பைங்கிளி காளி
நிலவை தலைமேல் உலவிட வைத்தா
நெஞ்சில் உலாவும் பைங்கிளி காளி
எளியேன் வணக்கம் ஏற்பாய் நீயே
என்றும் என்னுடன் இருப்பாய் தாயே
மறைகள் முழங்கும் மங்கள உருவே
மங்கையற்கரசி உன் மலரடி சரணம்
அவரவர் பலனை அளக்கும் திருவே
அருளே ரதியே எழிலடி சரணம்
தவமே சக்தி தாயே சரணம்
தாமரை அமர்வாய் தளிரடி சரணம்
குறையா நிறைவாய் வருவாய் சரணம்
அறிவின் துணையே திருவடி சரணம்
தாமரை முகத்தோய் தாழ்மலர் சரணம்
பூமாதேவி உன் பொன்னடி சரணம்
தாமரை முகத்தோய் தாழ்மலர் சரணம்
பூமாதேவி உன் பொன்னடி சரணம்
பாற்கடல் அலைகள் பாடிடும் பாட்டே
தாலாட்டாகும் தாயே சரணம்
பாற்கடல் அலைகள் பாடிடும் பாட்டே
தாலாட்டாகும் தாயே சரணம்
தேவரும் தேடும் தீஞ்சுவை அமுதொடு
கூட பிறந்தாய் கொழுந்தே சரணம்
தேவரும் தேடும் தீஞ்சுவை அமுதொடு
கூட பிறந்தாய் கொழுந்தே சரணம்
தேனிலவுடனே வளர்ந்தாய் சரணம்
நாரணன் தேவி நல்லோய் சரணம்
தேனிலவுடனே வளர்ந்தாய் சரணம்
நாரணன் தேவி நல்லோய் சரணம்
தாமரை முகத்தோய் தாழ்மலர் சரணம்
செந்தாமரை வந்தாய்
நலம் தந்தாய்
நீ என் தாய்
செந்தாமரை வந்தாய்
நலம் தந்தாய்
நீ என் தாய்
செந்தாமரை வந்தாய்
நலம் தந்தாய்
நீ என் தாய்
திருவே ஒளி உருவே
மனம் இறைவே
எனக்கருளே
திருவே ஒளி உருவே
மனம் இறைவே
எனக்கருளே
நைந்தார் துயர்
பஞ்சாய் செல
பைந்தார் தரும் பாவாய்
நைந்தார் துயர்
பஞ்சாய் செல
பைந்தார் தரும் பாவாய்
ஞாலம் முழுதாள்வாய்
சிறுநாயேனையும் காவாய்
அண்டர்க்கபயம் தந்தனை
கொண்டல் நிறம் கொண்டான்
அண்டர்க்கபயம் தந்தனை
கொண்டல் நிறம் கொண்டான்
அரங்கன் சாரங்கம்
எனும் உறம் கொள் வில்லாளன்
அரங்கன் சாரங்கம்
எனும் உறம் கொள் வில்லாளன்
என் தோள் வளர் தேனே
எழில் மானே திருமகளே
என் தோள் வளர் தேனே
எழில் மானே திருமகளே
எந்தன் நிலை உந்தன் விழி
எழிலால் தினம் வளர்க
எந்தன் நிலை உந்தன் விழி
எழிலால் தினம் வளர்க
பிருகுமா முனிவன் செல்வி
பீடுடை அணங்கே போற்றி
அரவணைத் துயிலும் அண்ணல்
எழில் மார்பு தவழ்ந்தாய் போற்றி
உரலொடு கட்டப் பெற்றும்
உலகினர் கட்டவிழ்க்கும்
திருமாலின் துணையே போற்றி
செல்வமே போற்றி போற்றி
நந்தனின் மகனை நத்தும்
சுந்தரி தாள்கள் போற்றி
நந்தனின் மகனை நத்தும்
சுந்தரி தாள்கள் போற்றி
ஞாலங்கள் காக்கும்
அன்பு நாயகி பாதம் போற்றி
ஞாலங்கள் காக்கும்
அன்பு நாயகி பாதம் போற்றி
செந்தாமரையில் வாழும்
தெய்வமா மணியே போற்றி
செந்தாமரையில் வாழும்
தெய்வமா மணியே போற்றி
தேவர்கள் பூஜை செய்யும்
செல்வமே போற்றி போற்றி
பொருளிலார்க்கிவுலகம் இல்லையென்ற
பொருள் சொல்லி பொருளேந்து பாதுகாத்து
நிறைவான இன்பங்கள் யாவும் தந்து
நிம்மதியை தந்ததுடன் நிலைமை தந்து
கலை தந்து கவி தந்து காட்சி தந்து
கதி தந்து விதி மாற்றி கருணை காட்டி
அரசரெல்லாம் அடிபணியும் பரிசு கூட்டி
அன்பு விழி நாட்டி எனை ஆட்டுவித்தாய்
உன்னை நான் ஒரு கணமும் மறக்க மாட்டேன்
உண்மை இது நன்மையெல்லாம் உவந்து தந்தாய்
என்னை நான் ஏறிட்டு பார்க்கச் செய்த
ஏந்திழையே எழில்மாலின் இன்ப ஊற்றே
உன் அடியார் திருக்கூட்டம் தன்னில் என்னை
ஒருவன் என சேர்த்த உனை ஓயாதென்றென்
நன்னாவால் நல் உளத்தால் உடலால் ஒன்றி
நலம் பெருக பாடிடுவேன் வளம் தா தாயே
செக்கர் நிற தாமரைமேல் சிரித்திருப்பாய்
திருவடியும் தாமரையே செங்கையெனும்
தக்கதொரு தாமரையில் தாமரை பூ
தனிக்கொடியாய் பிடித்திருப்பாய்
தூய வெள்ளை பட்டுடுத்தி
முல்லை மலர் மாலை சூடி
படைப்புக்கு காரணங்கள்
சொல்லுவாள் போல்
தத்துவமாய் தனி நிலையில் நின்றிருப்பாய்
தாயன்புக் ஈடுண்டோ தயை செய்வாயே
எட்டுத் திக்கும் நிற்கும் யானைகள் இவள் நீராடிட என்றேன்
முட்டச் சென்றே கங்கா நதியை முண்டு கொண்டு வந்தேன்
கொட்டும் தங்கக் குடத்து நீரில் குளித்தெழுந்த கோலம்
தொட்டதெல்லாம் பொன்னாய் செய்தாள் தூய விடியற்காலம்
கருணை அலைகள் பொங்கும் கடலை கடைக்கண் நோக்கி கண்டேன்
கால காலம் வாழும் வகையில் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்
கமலக்கண்ணன் நெஞ்சில் வளரும் கண்மணி தன்னை கண்டேன்
கவலையில்லா வாழ்வு தாயென அவளை வேண்டிக்கொண்டேன்
என்னைப்போலே அன்னை அவளை
யாவர் துதி செய்தாலும்
கண்ணன் தேவி கண்கள் மலரும்
கனக காரி பொழியும்
என்னைப்போலே அன்னை அவளை
யாவர் துதி செய்தாலும்
கண்ணன் தேவி கண்கள் மலரும்
கனக காரி பொழியும்
மண்ணின் மீது மன்னர் போலே
வாழும் வாழ்வு சூழும்
எண்ணம் கூடும் புண்ணியம் சேரும்
லக்ஷ்மி தாள்கள் சரணம்
எண்ணம் கூடும் புண்ணியம் சேரும்
லக்ஷ்மி தாள்கள் சரணம்
லக்ஷ்மி தாள்கள் சரணம்