Оберіть трек для відтворення
Сингл / Трек
சில்லாவோ திண்டுகல்லு
சின்னாள பட்டி பக்கம் சொல்லு
நம்ம சிலுக்குவாருபட்டி சிங்கம்
செம்பு கலக்காத தங்கம்
அது வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்
அண்ணன் அன்புக்கு அன்னை தெரசா (ஆஹா)
அறிவுக்கு அப்துல் கலாம் (ஓஹோ)
அடக்கத்துல நெல்சன் மண்டேலா (அடடடடா)
நம்ம போஸ்பாண்டி அண்ணன் குடுத்த ஐந்நூற (ஆமா)
அஞ்சு லட்சமா நெனச்சுகிட்டு (ஆமா)
நம்ம அல்லி நகரத்து அடிய கொஞ்சம் அடிச்சுத்தான் காட்டுவோமா?
ஊர காக்க உண்டான சங்கம்
உயிர குடுக்க உருவான சங்கம்
இல்ல, இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்
நீதி நேர்ம காக்கின்ற சங்கம்
நெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்
இல்ல, இது இல்ல
இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
(எ-ஹேய்)
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்
(ஹ-ஹ-ஹ-ஹ)
ஆழம் தெரியாம கால வச்சு அடியும் சருக்கிருவோம்
ஹே ஊரு நடுவால banner வச்சி பட்டய கெளப்பிருவோம்
போற வழி போவோம்
பெரும் புள்ளிய போலதான் வாழ்வோம்
கண்ட எடத்துல பந்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்ட நடக்கையில் கட்டைய போடுவோம்
சந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம் நாங்க
அடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்
அழகு பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்
எங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்
நாங்க செம்ம வாலு
செய்யும் சேட்டைக்கு கெடையாது rule'u
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
(இங்யாரு)
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம
(கொன்றுவேன் பாத்துக்க)
மோதும் புலியாக லந்தடிபோம்
மொறச்சா பயந்திருவோம்
(அப்பறம்)
நேரம் தெரியாம தூங்கிருவோம்
மோதும் புலியாக லந்தடிபோம், மொறச்சா பயந்திருவோம்
நேரம் தெரியாம தூங்கிருவோம், நெறையா பேசிருவோம்
வெயில் அடிக்குது, மழை அடிக்குது
அலை அடிக்குது, புயல் அடிக்குது
பற பறக்குது, குறு குறுக்குது
பருவ பொண்ணுனா shock அடிக்குது ஏங்க?
கொடி பறக்குது, வெடி வெடிக்குது
குலுங்க-குலுங்க கிளி சிரிக்குது
பறை அடிக்குது, தவுல் அடிக்குது
மனசுக்குள்ளார மணி அடிக்குது
நாங்க செம்ம வாலு
செய்யும் சேட்டைக்கு கெடையாது rule'u
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
(அடியே ஆத்தா)
இவிங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்
(ஹ, இனிமே எல்லாம் அப்படித்தான், ஹான்)