Оберіть трек для відтворення
Сингл / Трек
மெதுவாகத்தான், மெதுவாகத்தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா?
மெதுவாகத்தான், மெதுவாகத்தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா?
மயிலாசன மரபினல் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழி ஓரத்தில் விழுந்து விட்டனே நான்
மெதுவாகத்தான், மெதுவாகத்தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா?
அன்னம், மடவண்ணம் அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம், இவள் அழகு
எட்டும், திசை எட்டும் தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே
கொடி வேண்டுமா? குடை வேண்டுமா?
உன் மடிபோல யாவும் சுகம் நல்குமா?
படை வேண்டுமா? பகை வேண்டுமா?
உனைபோல் வீழ்த்த ஆள் ஏது?
எனை வெல்ல யாரும் இல்லை
உனை அன்றி திசைகள் வெல்லும் இசையே
ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன்
வானம் தாண்டி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர்தான் இவளல்லவா?
ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன்
வானம் தாண்டி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர்தான் இவளல்லவா?
த்ராணா, த்ராணா
என்னை கொஞ்சுறானா உன்னை மிஞ்ச ஆனா
அழகு போகும் வீணா நேரம் போக்க வேணா
தொட்டு வந்த முல்லை விட்டு வைத்ததில்லை
கொஞ்சும் அன்புத் தொல்லை காட்டும் இன்ப எல்லை
ஜாரே-ஜாரே, ஜாரே, ஜாரே-ஜாரே, ஜாரே
ஜா-ஜாரே, ஜா-ஜாரே, ஜா-ஜாரே
ஜா-ஜாரே, ஜா-ஜாரே, ஜா-ஜாரே
ஜாரே-ஜாரே-ஜா
ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன்
வானம் தாண்டி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர்தான் இவளல்லவா?
அன்னம், மடவண்ணம் அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம், இவள் அழகு
எட்டும், திசை எட்டும் தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே
கொடி வேண்டுமா? குடை வேண்டுமா?
உன் மார்போல யாவும் சுகம் நல்குமா?
படை வேண்டுமா? பகை வேண்டுமா?
உனைபோல் வீழ்த்த ஆள் ஏது?
மெதுவாகத்தான், மெதுவாகத்தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா?
மெதுவாகத்தான், மெதுவாகத்தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா?