Оберіть трек для відтворення
எழுந்தால் மலை போல
நடந்தால் நதி போல
எழுந்தால் மலை போல
நடந்தால் நதி போல
அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்
பொன்னான மனசிருக்கும்
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு
எப்போதும் திறந்து இருக்கும்
அந்த வெட்டருவா மீசைக்குத்தான்
எட்டூரும் பணிஞ்சிருக்கும்
அவர் தொட்டு தந்த நெல்லுமணி
முப்போகம் விளைஞ்சிருக்கும்
எழுந்தால் மலை போல
நடந்தால் நதி போல
வைகை ஆறும்தான் கடல பாக்கல
வாசுதேவர் மனம் கடலாச்சி
எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி
வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல
வாசுதேவர் கை படகாச்சி
எங்க வாசுதேவர் கை படகாச்சி
கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு
தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு
நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு
வீட்டுக்கு வீடு எரியுதுங்க
வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு
எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு
எங்க உசுரெல்லாம் ஊடுருவும்
உன்னோட புன்சிரிப்பு
எங்க மனசாளும் மன்னனுக்கு
மத்தாப்பு வரவேற்பு
எழுந்தால் மலை போல
நடந்தால் நதி போல
வில்லு வண்டியில போகும் மிடுக்குல
வீரம் வெளையுது கழனியிலே
அத கேட்டுப் பாருங்க வெடலைகள
பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான்
பயிசல் செய்யுது வழக்குகள
இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல
சுத்தி எரியும் எந்த நெருப்பும்
தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை
அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை
சத்தியத்தையும் தர்மத்தையும்
காத்திருக்கும் எங்க தர்மதுரை
உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை
இங்க நடமாடும் சூரியனை
கும்பிட்டு பொங்க வச்சோம்
எங்க பசி தீர்த்த தர்மனுக்கு
பல்லாக்கு தூக்கி நிற்போம்
எழுந்தால் மலை போல
நடந்தால் நதி போல
அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்
பொன்னான மனசிருக்கும்
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு
எப்போதும் திறந்து இருக்கும்
அந்த வெட்டருவா மீசைக்குத்தான்
எட்டூரும் பணிஞ்சிருக்கும்
அவர் தொட்டு தந்த நெல்லுமணி
முப்போகம் விளைஞ்சிருக்கும்
எழுந்தால் மலை போல
எழுந்தால் மலை போல
நடந்தால் நதி போல
நடந்தால் நதி போல